தற்போது பல முன்னணி பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை கடந்த சோசியல் மீடியாவில் தங்களது கவனத்தை அதிகளவில் செலுத்தி வரும் நிலையில் பலரும் தங்களது இணைய பக்கத்தில் சிருவயது மற்றும் குழந்தைப்பருவ புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப விருந்து கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் தனது சிறுவயதில் பெருந்தலைவர் காமராஜர் உடன் நெருக்கமாக இருக்கும் படி எடுத்துக்கொண்ட

புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்நிலையில் அந்த பிரபலம் யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அவர் யார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில்  80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி , குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது கவனத்தையும் கவர்ந்து திரையுலகில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர்

பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சின்னி ஜெயந்த். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டர்கள் எனலாம் அந்த அளவிற்கு முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலரது படத்திலும் கல்லூரி நண்பனாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் சின்னி ஜெயந்த் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் 7 வயதில் காமராஜர் உடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை  பதிவிட்டு அதில் , காமராஜர் அய்யா முன் பாடினேன் , இதையடுத்து அவர் என்னிடம் நீ நல்ல கலைஞனாக வருவாய் என வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..