தற்போது மக்கள் மத்தியில் திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகளும் புகைப்படங்களும் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளது. மேலும் சொல்லப்போனால் இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலமாக வலம் வரும் பலரும் சோசியல் மீடியாவின் பிரபலமாகி வந்தவர்கள் தான். அந்த வகையில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களும் படங்களில் கவனம் செலுத்துவதை தாண்டி சோசியல் மீடியா பக்கம் அதிகளவில் ஆர்வம் காட்டி

வருகின்றனர். இந்நிலையில் பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் இப்படி இருக்கையில் சிறுவர்மலர் அட்டைப்படத்தில் கியூட்டாக இருக்கும் குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும்

ஆவலுடன் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை பிரபல நடிகை ரம்யா பாண்டியன் தான் அது . சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை அடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த

படத்தை தொடர்ந்து முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…….