தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகள் வந்துவிட்ட காரணத்தால் முன்னனி நடிகைகள் பலருக்கும் படங்களில்  அவ்வளவாக நடிக்க வாய்ப்புகள் வராததை அடுத்து பலரும் சினிமாவை விட்டு விலகி வருவதோடு இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் வருகின்றனர் . இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் பரத் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள்

மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பிப்ரவரி 14 இந்த படத்தின் ஹீரோயினாக தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ரேணுகா மேனன். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ் இந்த படத்தை தொடர்ந்து தாஸ், கலாபக்காதலன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .

இவ்வாறு இருக்கையில் மலையாளத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பிரபல சாப்ட்வேர் இன்ஜினியர் சுராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து திருமணத்திற்கு அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து

தனது குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தனது கணவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார் அதோடு அங்கு சொந்தமாக நடன பள்ளி ஒன்றையும் நடத்தி  வருகிறார் . இந்நிலையில் இவர்களுக்கு இருமகள்கள் உள்ள நிலையில் இவரது சமீபத்திய குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……