தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இன்றைக்கு இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராதிகா சரத்குமார் . இவர் அந்த காலத்திலேயே

ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அப்போதே வெறுமனே படங்களில் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து வந்தார். இதையடுத்து தற்போது தமிழ்,

தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வபோது தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது அம்மா மற்றும் மகள் , பேத்தி  என

அனைவருடனும் பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து ராதிகா எம் ஆர் ராதா அவர்களின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் அவரது அம்மா கீதா ராதாவை பலரும் பார்க்காத நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……….