தற்போது சினிமாவில் பலரும் புதுமுகங்களாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர் நடிகைகளும் என்னதான் தற்போது படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் தங்களது நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள் எனலாம் . அந்த வகையில் எம்ஜிஆர் , சிவாஜி காலத்தில் இருந்து திரையுலகில் கதாநாயகியாக நடித்து தனது நேர்த்தியான

நடிப்பு மற்றும் அழகால் மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பலரையும் தனது ரசிகர்களாக இன்றளவு வரை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை கேஆர் விஜயா. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு அந்த காலத்தில் இருந்த பலருக்கும் இன்றைக்கும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து பல

முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவர் குறித்த எந்த தகவலும் படங்களிலும் இவரை பார்க்க முடியாமல் இருந்த நிலையில் இவருக்கு என்ன ஆனது என பலரும் கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து விசாரித்த போது கேஆர் விஜயா மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் பிரபல தயாரிப்பாளர் பிரகாஷ் சந்திரா

தயாரித்து நடிக்க இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகி வரும் மூத்தகுடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அந்த படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………..