திரையுலகில் தற்போது இளம் நடிகைகள் பலரும் ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களை மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு போட்டியாக பல முன்னணி நடிகைகள் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா . இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம்

என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது பல முன்னணி வெப் சீரியஷிலும் நடித்து வருகிறார் அதோடு தமிழில் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் தமன்னா பார்ட்டி

ஒன்றில் கலந்து கொண்ட போது பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் நெருங்கி பழகி வந்தது மட்டுமின்றி அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள தமன்னா அதில், நாங்கள் இருவரும்

ஒன்றாக ஒரு படத்தில் நடித்தோம் இதனால் சில வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் நிலையில் இதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்து கொண்டே இருப்பது எல்லாம் தேவையில்லாதது அதை பற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்சையை கிளப்பி வருகிறது………..