இன்றைக்கு திரையுலகில் எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த பல நடிகைகள் இன்றைக்கு சினிமாவில் காணாமல்

போனாலும் தங்களது நடிப்பின் மூலமாக இன்றும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் . துவக்கத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமான இவர் நடித்த சில படங்களிலேயே தனது வசீகரமான அழகு மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பலரையும் கவர்ந்த நிலையில் ஹீரோயினாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில்

ஜோடியாக நடித்துள்ளார். அதோடு படங்களில் ஹீரோயினாக மட்டுமின்றி கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் சிவகாமி கதாபத்திரத்தில் தனது கம்பீரமான நடிப்பால் பலரையும் மிரள வைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின்

படங்களில் வில்லி, செண்டிமெண்ட், அம்மா , குணசித்திரம் என பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ரம்யா கிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு தெலுங்கு முன்னணி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணத்தின் போது எடுக்கபட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…………