தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பல நடிகர்களில் ஒருவர் பிரபல முன்னணி நடிகர் அரவிந்த்சாமி இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு பல இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். இதனைதொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிதிரைபடமான தளபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக

மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதை அடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் பாம்பே படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்ததை அடுத்து இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது எனலாம். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஹீரோவாக நடிப்பதை தாண்டி பல படங்களில் கதைக்கு ஏற்ப பல

மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து தனது அசுர நடிப்பின் மூலமாக பலரையும் வியப்படைய செய்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வரும் நிலையில்

அரவிந்த் சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் . இந்நிலையில் இவரது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..