தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் அறிமுகமாகி வருவதோடு அதிலும் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மனதை கவர்ந்து தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்வதோடு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு

நிகழ்ச்சியின் மூலமாக திரையுலகிற்கு தன்னை  அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் ரோபோ சங்கர். இதையடுத்து அந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானதை அடுத்து திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து அஜித், விஜய், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற லெஜென்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து

பலரையும் வியக்க வைத்திருந்தார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் சமீபத்தில் தனது ஹோம் டூரை போட்டிருந்த நிலையில் அதில் அவர்களது வீட்டில் பச்சைக்கிளி இருப்பதை பார்த்த வனத்துறையினர் அவருக்கு லட்சகணக்கில் அபராதம் விதித்திருந்தனர். இது ஒரு பக்கம் இருக்க ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது காரணம் அந்த புகைபடத்தில் ஆளே

அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பு தோலுமாக மாறிபோயுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு அப்படி என்ன ஆச்சு என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இது குறித்து கேட்டபோது அவர் தற்போது புதிதாக நடிக்கவுள்ள படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து உள்ளதாக கூறியுள்ளார் மேலும் அவர் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………..