சமீபகாலமாக மக்கள் மத்தியில் அதிகளவில் பேசுபொருளாக இருந்து வரும் நிகழ்வு என்றால் அது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட மக்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் வருகைக்காக தான் இருக்கும் . இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான்,

அர்ஜுன், சஞ்சய் தத், மேத்யு, கவுதம் மேனன், த்ரிஷா உள்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நடந்து வந்த நிலையில் தற்போது அங்கு படபிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு முழுவுதும் தற்போது சென்னை திரும்பிய நிலையில் இங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் படபிடிப்பு துவங்கியுள்ளது . இவ்வாறு

இருக்கையில் இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகர் இணைய போவதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி உலகளவில்

மாபெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நிச்சயம் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் உள்ளது என நம்பலாம் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………