கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வீடியோ மற்றும் பல சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு அதன் மூலம் தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே ஏராளம் எனலாம். அந்த வகையில் திரையுலகில் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் துணை நடிகராக நடித்து வருபவர் பிரபல நடிகர் கூல் சுரேஷ். இந்நிலையில் இவர் இந்த வருடங்களாக படங்களில் நடித்து அதன் மூலமாக

பிரபலமானதை காட்டிலும் கடந்த சில மாதங்களாக திரையங்குகளில் வெளியாகும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர் வாசலிலே இவர் கொடுக்கும் விமர்சனங்கள் மற்றும் ஆதரவு எனும் பெயரில் இவர் செய்யும் அளப்பரைகளின் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம். இப்படி ஒரு நிலையில் சிம்புவின் பலத்த ரசிகரான இவர் அவரது மாநாடு படத்தில் இருந்து அவருக்கு பலத்த ஆதரவையும் விளம்பரத்தையும் செய்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில்

வெளியாகவுள்ள சிம்புவின் பத்து தல படத்திற்கு கூட ஹெலிகாப்டரில் வந்து இறங்கபோவதாக கூறிய நிலையில் தற்போது கூல் சுரேஷ் நடுகடலில் குதித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரித்த போது, பிரபல யூடுப் சேனலான சினிஉலகம் சேனல் இவரை பேட்டி எடுத்த நிலையில் அதன்  தொகுப்பாளர் அவரிடம் சிம்புவை வைத்து அவரது விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இவ்வாறு செய்து வருவதாக ரசிகர்கள்

கூறி வருவதாக கூறிய நிலையில் முதலில் பொறுமையாக பேசி வந்த கூல் சுரேஷ் ஒரு கட்டத்துக்கு மேல் கோபமாகி தொகுப்பாளருடன் சண்டை போட்டு நடுகடலில் குதித்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் பதறிய நிலையில் ஒருவழியாக அவரை மீட்டு படகில் ஏற்றியுள்ளனர் இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………..