பிரபல முன்னணி தனியார்  சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்

ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் பிபி ஜோடிகளில் இருவரும் ஒன்றாக நடனமாடியதை அடுத்து இவர்கள் காதல் பலமானது எனலாம். இதையடுத்து இருவரும் ஒன்றாக லிவிங் டூ கேதர் முறையில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற துணிவு படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இவ்வாறு

இருக்கையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல்  ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் பவானி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது . இது குறித்து கேட்டபோது, இணையத்தில் பவானியிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கும்

அமீருக்கும் திருமணம் முடிந்ததை ஏன் வெளியில் சொல்லவில்லை என கேட்டதற்கு , பதில் கொடுத்த அம்மிணி கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருந்தேன், அடுத்து நாங்கள் இருவரும் காலமாகி விட்டோம் இதனைதொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என சொல்கிறார்கள் அடுத்து என்ன என கேட்பது போல் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………