இன்றைக்கு மக்கள் மத்தியில் திரையுலக பிரபலங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் அதில் நடிக்கும் நடிகர்களும் தான் பிரபலமாக  உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே  வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரச்சிதா . இவ்வாறு பிரபலமாக பல தொடர்களில் நடித்து வந்த நிலையில் பிரபல

,முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி கொண்டார் . இந்நிலையில் ரச்சிதா சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே தனக்கு ஜோடியாக அதே  சீரியலில் நடித்த பிரபல சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து இருவரும் தொடர்ந்து  பல சீரியல்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன்னர் இருவருக்கும் இடையில் சில கருத்து

வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனர் . இதனை தினேஷ் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார் இதையடுத்து தினேஷ் அவரது மனைவி ரச்சிதாவை விவாகரத்து செய்வதற்கு பத்திரம் எல்லாம் தயார் செய்து விட்டதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது . இப்படி இருக்கையில் இதற்கு நேர்மறையாக ரச்சிதா ரகசியமான முறையில் இரண்டாவது திருமணம்

செய்து கொண்டதாகவும் இருவரும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது . இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் பலரும் இதற்கு பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர் ………….