தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருக்கும்  பல முன்னணி திரை பிரபலங்களுக்கும் எதாவது ஒரு வகையில் பாதிப்பு ஏற்பட்டு அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதோடு பலரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு காலமாகி வருகின்றனர் . இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சிறுத்தை படத்தின் மூலமாக மக்கள்

மத்தியில் இயக்குனராக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா. இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி அதில் வெற்றி பெற்று வரும் நிலையில் இவரது தம்பியும் பிரபல நடிகருமான பாலா  சமீபத்தில் தனது இணைய  பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு கல்லீரலில்

ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் இதையடுத்து அவருக்கு அங்குபலத்த சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் பாலா தனது மனைவியுடன் திருமணம் நாளை கொண்டாடிய நிலையில் , உங்கள்  அனைவருடைய பிரார்த்தனை காரணமாக தான் தற்போது நான்  மீண்டு வந்துள்ளேன் . அதோடு இனி எனக்கு மூன்று நாட்கள் கழித்து முக்கியமான அறுவை

சிகிச்சை ஒன்று உள்ளது இந்த சிகிச்சையின் போது நான் காலமாகி கூட போகலாம் . இருந்தும் உங்களுடைய அன்பு மற்றும் பிரார்த்தனை காரணமாக நான் பிழைத்துகொள்வேன் என நம்புகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்  . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………..