தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான பல புதுமுக நடிகர்கள் படங்களில் அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு முன்னோடியாக அந்த காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்த பல முன்னணி  நடிகர்கள் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தங்களது

நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் எனலாம் . அந்த வகையில் 80,90 களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனி பெரும் கூட்டத்தையே தனது ரசிகர்களாக வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் . இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் அரசியல் மீது அதித ஆர்வம் கொண்டு தனி கட்சி ஆரம்பித்து அதை நிர்வகித்து வருகிறார் . இப்படி

இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக இன்றளவும் சிகிச்சை பெற்று வருகிறார் . இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக இணையத்தில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது . இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகனான விஜய பிரபாகரன் தனது இணைய பக்கத்தில் புகைப்பட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது

தாத்தாவான அழகர்சாமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அதை வெகு விமர்சையாக கொண்டாடிய நிலையில் அந்த விழாவில் எடுத்து கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டதை அடுத்து அதில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அப்பாவை பார்த்த பலரும் அட  இவரா அது என வாயடைத்து போயுள்ளனர் ………..