தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகைகள் தொடர்ந்து  படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி  மாபெரும்

வெற்றிபெற்ற திரைப்படம் நண்பன் இந்த படத்தின் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகை இலியானா. இந்நிலையில் இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான தேவதாசு படத்தின் மூலமாக கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல

மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல்  அவ்வளவாக பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தனிமையில் இருந்து வரும் இலியானா சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்

அதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது குழந்தையின் வருகைக்காக  காத்து  இருப்பதாகவும் புகைப்படம் மூலமாக பதிவிட்டுள்ளார் . அதை பார்த்த பலரும் வியந்து போனதோடு அப்ப உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா கணவர் யாருன்னு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)