இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த காலத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுவதோடு இன்றளவும் மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது எனலாம். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு. மேலும் சொல்லப்போனால் இந்த படத்தை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்

எனலாம் அந்த அளவிற்கு இந்த படம் வெகு பிரபலம் எனலாம் . இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக ஊர்வசி நடித்திருந்த நிலையில் பல முன்னணி பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் டீச்சராக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதை திக்குமுக்காட வைத்தவர் பிரபல நடிகை தீபா. இவர் முதன் முதலில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1975-ம் ஆண்டு

வெளிவந்த அந்தரங்கம்  படத்தின் மூலமாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த 1982-ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இவர்களுக்கு

மகன் ஒருவர் உள்ளார்.  அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தீபா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரனுடன் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அதைபார்த்த பலரும் நம்ம முந்தானை முடிச்சு டீச்சரா இது என வாயடைத்து போயுள்ளனர்…………..