தமிழ்க சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் நடித்து வருவதோடு நடிக்கும் சில படங்களிலேயே தங்களது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் வெகுவாக பல மக்களின் மனதை கொள்ளை கொள்வதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு திரையுலகில் பல

முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னனி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர். இந்நிலையில் சமீபத்தில் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது . காரணம் அந்த படத்தில் ரோபோ சங்கர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பு தோலுமாக மாறிப்போன நிலையில் இருந்தார். இதையடுத்து அவருக்கு என்ன ஆனது என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் புதிய படத்தில்

நடித்து வருவதாகவும் அதற்காக தனது உடல் எடையை குறைத்து இருப்பதாகவும் கூறி வந்த நிலையில் உண்மையான தகவல்கள் அண்மையில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவரது மனைவி பிரியங்கா சமீபத்தில் வெளியிட்ட பதிவில் ரோபோ சங்கர் உடல்நிலை மிக மோசமாக இருந்ததோடு அவரது முகமும் கலை இழந்து காணப்பட்ட நிலையில் அவரது உடல்நிலையில் எதோ பிரச்சனை இருப்பது உறுதியானது. அந்த வகையில் ரோபோ சங்கர்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு

சென்றிருந்த நிலையில் அவருக்கு வயிற்று  போக்கு ஏற்பட்டதை அடுத்து அவரை  பரிசோதித்த போது அவருக்கு ஆறு மாதமாக  மஞ்சள் காமாலை இருந்து வந்தது . இந்நிலையில் இது குறித்து தெரிவதற்கு முன்னரே ரோபோ சங்கர் அசைவம்  மற்றும் மது பழக்கத்தை நிறுத்திய நிலையில் அவரது உடல் நிலை விரைவில் குணமடைய ஏதுவாக இருந்தது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் ……………..