சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார்  சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த மூன்று சீசன்களை கடந்து வெற்றிகரமாக நான்காவது சீசனையும் கலக்கி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சமையல் போட்டியை மையமாக கொண்ட போதிலும் இதில் கோமாளிகளாக வரும் காமெடி நடிகர்கள்

செய்யும் சேட்டைகள் மற்றும் அளப்பரைகளுக்கு பலரும் ரசிகர்களாக இருந்து வுருவதொடு இந்த நிகழ்ச்சியை பலரும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் புதுமுகங்களாக பல கோமாளிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து . துவக்கத்தில் டிக்டாக் மூலமாக பிரபலமான இவர் இதனைதொடர்ந்து தனியாக யூடுப்  சேனலை நடத்தி அதில் தனக்கு வரும்

லெட்டர்களை படித்து பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் இவருக்கு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சில வரங்களே இருந்த நிலையில் சில குடும்ப காரணங்களால் அவராக வெளியேறி விட்டார் இருப்பினும் அவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உருவானது எனலாம். இதையடுத்து குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு வந்த

நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியில் இனி வர போவதில்லை எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள ஜிபி முத்து தனக்கு சிறிது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை மற்றும் மாத்திரைகளை எடுத்து வருவதாகவும் அதனால் சில வாரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது இந்த மாத  இறுதியில் இருந்து சூட்டிங்கில் பங்கேற்பேன் என கூறியுள்ளார்………………