தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை பற்றியதாக தான் இருக்கும். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், த்ரிஷா, மேத்யு, மன்சூர் அலிகான் உள்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும்

நிலையில் ரசிகர்கள் பலரும் பலத்த ஆவலுடன் இருந்து வருகின்றனர். இதையடுத்து லியோ படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் முடிந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் சென்னை திரும்பிய நிலையில் இங்கு பிரமாண்டமான செட் ஒன்றை அமைத்து அதில் பல சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இந்த படம் குறித்த மேலும் ஒரு புதிய அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும்

திரையுலகினர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு அடுத்தபடியாக யாருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என பலரும் எண்ணி வந்த  நிலையில் பலரும் அர்ஜுன் அல்லது சஞ்சய் தத் இருக்கும் என நினைத்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் இல்லையாம். ஆம் இந்த படத்தில் விஜய்க்கு இணையான ரோலில் சிங்கம் ஒன்றை நடிக்க

வைத்துள்ளார்களாம் படக்குழு . இதனைதொடர்ந்து அந்த சிங்கத்தின் கிராபிக்ஸ் செலவு மட்டும் சுமார் ரூ 15 கோடிக்கு மேல் என கூறப்படும் நிலையில் இந்த சிங்கம் இந்த படத்தின் முக்கிய காட்சியில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் பலத்த எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது…………….