மக்கள் மத்தியில் பொறுத்தவரை வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலம் பெறுகிறதோ அதை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் எளிதில் பலத்த வரவேற்பை பெற்று விடுகின்றன . அதிலும் முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருவதோடு இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளார்கள் எனலாம். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும்

நிலையில் நகைச்சுவை கலந்த சமையல் போட்டியை மையமாக கொண்டு வெளியாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெருமளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடியவுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த வாரமே பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ்  நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து ஆறு சீசன்களை கடந்த நிலையில்

தற்போது ஏழாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம்  கலந்து கொள்ள போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இம்முறை பிக்பாஸ் சீசனில் இரண்டு முன்னணி பிரபலங்கள், மக்களில் இருந்து மூவர்,  சீரியல் பிரபலங்கள் இருவர், செய்தி வாசிப்பாளர் அல்லது தொகுப்பாளர் இரண்டு நபர், அவ்வளவாக பரிட்சியமில்லாத பிரபலங்கள் இருவர், மாடலிங் பிரிவை சேர்ந்த இருவர், சோசியல் மீடியா

பிரபலங்கள் இருவர், வழக்கம் போல் திருநங்கை ஒருவர், சமூகசேவை அல்லது அரசியல் சார்ந்த இருவர், பேச்சாளர்கள் இருவர், வெளிநாட்டவர் இருவர் என  பலரையும் களமிறக்க போவதாக கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் 7    வரும் ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர் ………………