தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் நம்மை விட்டு விலகும் வகையில் தொடர்ந்து காலமாகி நம்மை மீளதுயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த நிலையில் அதிகரித்து வரும் நிலையில் எதிர்பாரதவிதமாக பல இளம் நடிகர் நடிகைகளும் எதாவது வகையில் பாதிக்கப்பட்டு காலமாகி வரும் நிகழ்வு

ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் தள்ளி வருகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி திரை பிரபலம் ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு அதில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர  கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை

வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் கசான் கான். மலையாள சினிமாவில் நடித்து வந்ததை அடுத்து தமிழிலும் மேட்டிகுடி, உள்ளத்தை அள்ளித்தா, பிரியமானவளே போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் நேற்றைய நாளில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து திரையுலக முன்னணி பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்………..