கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு இருக்கையில் தற்போது மேலும் ஒரு முன்னணி சினிமா பிரபலம் ஒருவர் எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் சோகத்தில்

ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பல  முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகர் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் பாவா லட்சுமணன். இந்நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் கடந்த சில

வருடங்களாக அவ்வளவாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில்  அவர் பணம் மற்றும் மனதளவில் அதிகளவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு சர்க்கரை நோயின் ஏற்கனவே இருந்த நிலையில் அதன் பாதிப்பு அதிகமானதை அடுத்து அவருக்கு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அவருக்கு அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்

அவரது காலின் கட்டை விரலை அகற்ற கூறியதன் விளைவாக அதனை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் சினிமா உலகில் பெரும் வேதனையை அளித்து வருகிறது மேலும் அவர் விரைவில் மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்………..