தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் இவரது படங்கள் எப்போது திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் இவ்வாறு இருக்கையில் இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்த படமாக

பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், மன்சூர் அலிகான்  என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னையில் மிக பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வருகிறது .

இதையடுத்து படக்குழு லியோ படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லியோ படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த பாடலை தளபதி விஜய் அவர்களே பாடியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அந்த பாடல் வேற லெவலில் வைரளாகி வரும் நிலையில் அடுத்த வெறித்தனமான அப்டேட்

தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம். அந்த வகையில் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அதன் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருவதோடு ரசிகர்கள் பலரும் அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………………..