சின்னத்திரையில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் தனியார் சேனலான விஜய் டிவிக்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதையடுத்து இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களும் வேற லெவலில் பிரபலமாக உள்ள நிலையில் இந்த சேனலில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக

 

இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து வெற்றிகரமாக நான்காவது சீசன் வெளியாகி வரும் நிலையில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் முத்துக்குமார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சார்பட்டா பரம்பரை ,

பத்து தல போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து பலரையும் தனது நடிப்பால் மிரள வைத்திருந்தார். இருப்பினும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் முத்துக்குமார் அவர்கள் புதிதாக விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார் இதனைதொடர்ந்து அந்த காருடன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் முத்துக்குமார்  டயோட்டா இன்னவோ கார் வாங்கியுள்ள நிலையில் அதன் விலை மட்டும் சுமார் 30 லட்சம் இருக்குமாம் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் வாயடைத்து போயுள்ளனர்………………..