தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகளவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் மாமன்னன் திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாகவும் பலத்த சாதனையை படைத்து வருகிறது.

இதையடுத்து இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைபுயல் வடிவேலு, பகத் பாசில் என பல முன்னணி திரை பிரபலங்கள் கொண்ட நிலையில் இந்த படம் முழுக்க அரசியல் ரீதியாக நடக்கும் சாதிய அடக்குமுறைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் வடிவேலு இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த படம் வெளியான நாளில் இருந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும்

இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்து வருவதோடு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி இந்த படத்திற்கு பின்னர் நடிக்க போவதில்லை என கூறிய நிலையில் இதுவே அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி படமாகும் அந்த படமும் இவற்றுக்கு வேற லெவலில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த படம் தற்போது வரை நாற்பது கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வரும் நிலையில் உதயநிதி படத்தின் இயக்குனரான

மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உதயநிதி அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க இவருக்கு சுமார் ஐந்து கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறபடுகிறது…………………