தமிழ் சினிமாவில் இன்றைக்கு சினிமாவில் பல இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி வரும் நிலையில் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட மாஸ் படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். மேலும் சொல்லப்போனால் இவரை பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இந்நிலையில் இவரது படங்கள் வெளியானாலும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் அதேபோல் அவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி தெரியாத தகவல்களே இல்லை எனலாம். அந்த

அளவிற்கு இவரை அனுதினமும் தொடர்ந்து வருகின்றனர் இருப்பினும் இவரை பற்றிய பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனது சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வரும் தளபதி விஜய் அவர்கள் கேப்டன் விஜயகாந்தின் பல படங்களில் அவருக்கு சிறுவயது தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் இவருக்கு முதலில் தளபதி எனும் பட்டம் ரசிகன் படத்தில் வந்த போது தான் கிடைத்தது. அதோடு தளபதி ரசிகன் படத்தில் தான் முதலில் தனது சொந்த குரலில் பாடியிருந்தார் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடல் தான் முதல் பாடல் .

மேலும் அப்போது எல்லாம் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என வரும் இன்றைக்கு அது போல் வருவதில்லை. தளபதி விஜய் தனது முதல் பத்து படங்களை தனது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சி இயக்கத்தில் நடித்திருந்தார். இதையடுத்து வேறு இயக்குனரின் முதல் படம் என்றால் அது ராஜாவின் பார்வையிலே தான் இந்த படத்தில் தான் முதலும் கடைசியுமாக தளபதியும் தல அஜித்தும் ஒன்றாக நடித்த படம். அதுமட்டுமின்றி விஜய் எப்போது காரில்

சென்றாலும் முதலில் அவர் கேட்கும் பாடல் இளையராஜா பாடல் தானாம். அதேபோல் தளபதி விஜய்க்கு பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி என அனைவருக்கும் தெரியும் அவரை விட இவருக்கு இன்னொரு நடிகரை மிகவும் பிடிக்குமாம் அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி காமெடி நடிகர் கவுண்டமணி தான் அது. இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………