தற்போது உள்ள நிலையில் சினிமாவில் படங்களில் நடிக்கும் பிரபலங்களை காட்டிலும்  சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பதிவிட்டு அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்கள் தான் அதிகம் எனலாம். இந்நிலையில் பிரபல இணையதளமான யூடூபில் தற்போது பலரும் பலவிதமான சேனல்களை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு அதன் வாயிலாக தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வருவதோடு பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பைக் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு அதன்

மூலமாக பல நகரங்களுக்கு சென்று அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு அதன் மூலமாக பல ரசிகர்களை தனக்கான சம்பாதித்து கொண்டவர் பிரபல யூடுபர் டிடிஎப் வாசன் . மேலும் 2கே கிட்ஸ் இடையே இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு வெகு பிரபலமாக இருந்து வரும் வாசன் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வரும் அதனையும் தனக்கு விளம்பரமாக மாற்றி பல வழிகளில் வருமானம் பார்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது இணையத்தை அடுத்து

சினிமாவில் களம் புகுந்துள்ள டிடிஎப் வாசன் பட்ஜெட் பிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அதில் அவருக்கு பிடித்த புல்லட்டில் விலிங் செய்தபடி வெளிவந்துள்ள நிலையில் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் செம வைரளாகி வருகிறது. இதற்கிடையில் இவரது சம்பளம் குறித்த தகவல்கள்

அண்மையில் இணையத்தில் வெளியாகி அனைவரையும் உறைய செய்துள்ளது., காரணம் இந்த படம் முழுக்க சுமார் 6 கோடி அளவில் எடுக்க உள்ள நிலையில் இதில் இவரது சம்பளம் மட்டுமே 1.8 கோடி என கூறபடுகிறது. தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து பல நடிகர்கள் கூட இன்றளவும் இந்த சம்பளத்தை வாங்காமல் இருக்கும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………