தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் மேலும் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக  பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர்கள் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது

இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமாவது தான் அதிகம் எனலாம். இவ்வாறு இருக்கையில் கடந்த சில  மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் சிறுவயதில் தாங்கள் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை ஆச்சரியபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் இளம் ஹீரோயின் ஒருவரின் சிருவயது புகைப்படம் இணையத்தில்

வெளியாகி செம வைரளாகி வருகிறது அந்த நடிகை வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை மஞ்சிமா மோகன். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயது முதலே பல

படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பிரபல முன்னணி நடிகரான கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது உடல் எடையை குறைத்து வரும் மஞ்சிமா மோகன் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது………………….