சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சமையல்  போட்டியை மையமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி . இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது

சீசனின் இறுதியை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ஆறு போட்டியாளர்கள் இறுதி கட்ட போட்டியாளர்களாக தேர்வு ஆகி உள்ளார்கள். இதையடுத்து மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி , விசித்ரா, ஆண்டி , கிரண் ஆகியோர் உள்ள நிலையில் இதில் யார் இந்த சீசனின் டைட்டிலை வெல்ல போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இறுதிவரரத்தின் டைட்டில் வின்னர்  யார்  எனும் தகவல்கள்

இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது அந்த வகையில் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 4-ன் டைட்டிலை மைம் கோபி அவர்கள் தட்டி சென்றுள்ளார் கடந்த மூன்று சீசன்களாக வனிதா, கனி, ஸ்ருதிகா என பெண்கள் வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த முறை முதல் தடவையாக மைம் கோபி

இறுதி போட்டியில் வென்றுள்ளார் . அதோடு இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டியும் , மூன்றாவது இடத்தையும் விசித்ராவும் பிடித்துள்ளார்கள் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது………………..