தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக பல தகவல்கள் கடந்த சில மாதங்களாக வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து அந்த நடிகர் யாரென

பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தமன்னா சமீபத்தில் கலந்து கொண்ட  பேட்டி ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கூறியிருந்தார். இதனைதொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதும் நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும்  நிலையில் பலரும் இவர்களது திருமணம் எப்போது என்பது போலன பல

கேள்விகளை எழுப்பி வருகின்றனர் . இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பு தெரிவிக்காமல் இருந்து வரும் தமன்னா மற்றும் விஜய் ஜோடியினர் தங்களது பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தமன்னாவின் வருங்கால மாமியாரும் விஜயின் தாயார் இவர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி

வருகிறாராம். இதன் காரணமாக தமன்னா இன்னும் சில மாதங்களில் விஜயை மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருமளவில் வைரளாகி வருகிறது………………