தற்போது சினிமாவில் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் ஹீரோ , ஹீரோயின்களை தாண்டி பலரும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு

கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு பல படங்களில் ஹீரோ, வில்லன், காமெடி என  பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து பலரையும் தனது நடிப்பால் வெகுவாக கவர்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் ரமேஷ் திலக். ரேடியோவில் ஆர்ஜெவாக தனது கலை உலக பயணத்தை தொடங்கிய இன்றைக்கு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்து வெளியான குட் நைட் படத்தில் வேற லெவலில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ரமேஷ் சூரியன் எப்எம்-ல் வேலைசெய்யும் போதும் உடன் வேலை செய்த நவலேட்சுமியுடன் காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம்

செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில் இவர்களது சமீபத்திய புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்களா இவரோட மனைவி என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்………………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ramesh Thilak (@rameshthilak)