இன்றைக்கு மக்கள் மத்தியில் அதிகளவில் ரசிகர்களை உடைய முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருகிறது . இதையடுத்து இந்த படத்தின் படபிடிப்புகள் ஏறக்குறைய முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் படக்குழு தொடர்ந்து பல அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை

திக்குமுக்காட செய்து வருகிறது. இப்படியொரு நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்களும் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பூவே உனக்காக . மேலும் சொல்லப்போனால் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று இது எனலாம்

இந்நிலையில் இந்த படத்தில் வரும் பாடலான மச்சினிச்சி வர்ற நேரம் பாத்து மண் மணக்குது பாடலுக்கு முரளி நடனமாடி இருப்பார். இதனைதொடர்ந்து அந்த பாடலில் தளபதி விஜய் ஒருவரின் தோளில் கைவைத்தபடி அதனை பார்த்து கொண்டிருப்பார் அந்த பிரபலம் யாரென தெரியுமா…? அது வேறு யாருமில்லை தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், செண்டிமெண்ட், காமெடி என பல மாறுபட்ட

கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் பிரபல முன்னணி நடிகரான இளவரசு தான். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவர் தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………………