தற்போது சினிமாவில் படங்களில் புதுமுகங்களாக ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பலரது கவனத்தையும் கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார்

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர்  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வேற லெவலில் பிரபலமாகி இருந்தார். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல முன்னணி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் மாறுபட்ட கதாபத்திரத்தில்

நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி  மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை  தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய மாளவிகா  அந்த விழாவில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆண் ஒருவருக்கு நெருக்கமாக கட்டிபிடித்து முத்தம் கொடுத்த நிலையில் மீண்டும்

அவரும் பதிலுக்கு மாளவிகாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இவர் தான் மாளவிகாவின் காதலனா என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர் நண்பர் தான் என கூறி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………..