தற்போது சினிமாவில் ஹீரோயின்களாக பல அறிமுக இளம் நடிகைகள் நடித்து வருவதோடு வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகையும் இயக்குனர் சங்கரின்

இளைய மகளுமான அதிதி சங்கர். இந்நிலையில் தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் அதிதி சங்கர் விரைவில் திருமணம்

செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்ட போது, அவரது தந்தையும் இயக்குனருமான சங்கர் அவர்கள் இவருக்கு கண்டிசன் ஒன்றை போட்டுள்ளாராம் அதில் இன்னும் இரண்டு வருடங்களில் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடித்து கொள் ஆனால் அதன் பின்பு கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதன் காரணமாக

அதிதி சங்கர் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………