தமிழ் சினிமாவில் இன்றைக்கு புதுமுக இயக்குனர்கள் பலரும் வந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி வரும் நிலையிலும் அந்த காலத்தில் வெளியான பல படங்களும் அதன் இயக்குனர்களும் இன்றைக்கு மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக தான் இருந்து வருகின்றனர் எனலாம். இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரண்ட்ஸ்  . மேலும்

சொல்லப்போனால் தளபதி அவர்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று எனலாம் . இதையடுத்து இந்த படத்தில் சூர்யா, தேவயாணி, ரமேஷ் கண்ணா , வடிவேலு என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இதனைதொடர்ந்து இந்த படத்தை இயக்கியவர் பிரபல முன்னணி இயக்குனர் சித்திக் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் அதில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளதோடு தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

அந்த வகையில் காவலன் , எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக  இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பாதிக்கபட்ட நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளார் இதன் விளைவாக அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை பிரிவில் எசிமோ எனும் கருவியின் மூலமாக சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மிக மோசமாகி வருவதாக மருத்துவர்கள் கூறி  வரும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..