இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே அதிகம் எனலாம். இப்படி ஒரு நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கூட படங்களில் நடிப்பதை தாண்டி அதிகளவு நேரத்தை இணைய பக்கத்தில் செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் தங்களது மாடர்ன் புகைப்படங்கள் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்களை ஆக்டிவாக வைத்து கொள்ளும்

நிலையில் தற்போது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி தமிழ் நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் அந்த பிரபலம் யாரென பல விதமான பதில்களை அளித்து வரும் நிலையில் அந்த புகைப்படத்தில் சிரித்தபடி இருக்கும் சிறுவன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

வெளியான மதயானை கூட்டம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் கதிர் தான் அது. இந்நிலையில் பிகில், விக்ரம் வேதா, கிருமி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில்  சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கதிர் சமீபத்தில் தனது

இணைய பக்கத்தில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இத்தனை பார்த்த அவரது ரசிகர்கள் கதிரா இது என வாயடைத்து போனதோடு அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனைதொடர்ந்து கதிர் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது……………..