தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் பெரிதளவில் மக்களிடையே விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றனர் . அதிலும் பிரபல தனியார்  சேனலான விஜய் டிவியில் வெளியாகும் ரியாலிட்டி  நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் தங்களை

பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இதையடுத்து தனது சிறுவயது முதல் தற்போது வரை பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் டிடி சமீபத்தில் பேட்டி ஒன்றில்

கலந்து கொண்ட போது அவரது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் தனக்கு பதினாறு வயது இருக்கும் போது தனது அம்மாவிடம்  கிளப் ஒன்றில் நடக்கும் பார்டிக்கு செல்ல அனுமதி கேட்டேன் ஆனால் அவர்  அதை மறுத்துவிட்டார்.  இதனைதொடர்ந்து உடனே எனது அப்பாவிடம் அனுமதி கேட்டேன் அவர்  போக சொன்னார்

மேலும் நான் பார்ட்டியில் மது குடிக்க மாட்டேன் என தீர்க்கமாக கூறி விட்டேன் . இந்நிலையில் தற்போது வரை எந்த பார்டிக்கு என்றாலும் எவ்வளவு கட்டாயபடுத்தினாலும் நான் குடிக்கமாட்டேன் என கூறி விடுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………………