இன்றைய சினிமாவில் ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி வரும் நிலையில் இதில் பலரும் சின்னத்திரையின் மூலமாக தங்களது திரைபயணத்தை தொடங்கி அதில் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று அதன் வாயிலாக திரையுலகில்  தங்களை அடையாளபடுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் கலந்து கொண்டு இன்றைக்கு சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் கவின்.

இந்நிலையில் இவர் படங்களில் நடித்து பிரபலமாவதற்கு முன்னரே பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாசில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். அதோடு பிக்பாஸ் விட்டில் இருக்கும் போது இவருக்கும் லாஸ்லியா இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் எண்ணிய நிலையில் அது வெறும் கனவாகவே போனது.

இந்நிலையில் சமீபத்தில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவாரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள்

வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் மோனிகா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனா காணும் காலங்கள் தொடரின் ரீ யூனியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….