ஒரு படம் வெற்றி பெறுவதற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஒரு வலுவான திரைக்கதை அதற்கேற்றவாறு அக்கதைக்கு ஏற்றார் போல் தங்களை மாற்றிக் கொள்ளும் ஹீரோ ஹீரோயின் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் அமைந்தாலே போதும் அப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைந்து விடும் என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம், இதில் கசப்பான உண்மை என்னவென்றால் ஒரு படத்தில் வரும் ஹீரோ ஹீரோயின் மற்றும் வில்லனின் ரோல்கள் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே அப்படத்தில் நடிக்கும் துணை கதாபாத்திரங்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் உண்டு,

இவர்கள் அனைவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனால் மட்டுமே படம் நல்ல ரிசல்ட் கொடுக்கும் எனலாம். மக்கள் மத்தியில் ஹீரோ ஹீரோயினை காட்டிலும் பெரிய முக்கியத்துவத்தை துணை நடிகர்களுக்கு கொடுப்பதில்லை இவை ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி சில துணை நடிகர்கள் ஒப்பற்ற தனித்தன்மையான நடிப்பினை வெளிப்படுத்தி தங்களின் பங்கும் ஒரு படம் வெற்றி அடைவதற்கு காரணமாக இருக்கிறது என உணர்த்தி விடுகின்றனர், அத்தகைய துணை நடிகர்களுள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் தான் தலைவாசல் விஜய் அவர்கள். இவர் ரஜினி கமல் விஜய் அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி

மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பெற்றுள்ளார், இதைத்தொடர்ந்து தனது குடும்ப வாழ்விலும் சேர்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறார் தலைவாசல் விஜய் அவர்கள், இதற்கு எடுத்துக்காட்டாக தனது மகளின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய ஒரு நல்ல தந்தையாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார், இவரது மகளுக்கு சிறுவயதிலிருந்தே நீச்சலில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது, மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்பி அவர்களை தயார் படுத்தி நேபாளில் நடைபெற்ற 13 வது தெற்காசிய நீச்சல் போட்டியில் பங்கு பெற்று பதக்கத்தை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

அவர் ஆசையாக வளர்த்த தன்னுடைய மகள் ஜெயவீனாவுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். மணமகன் யார் என்றால் நம் அனைவருக்கும் தெரிந்த தமிழக கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் அவர்கள்தான். இவர் தமிழக அணியின் ரஞ்சிக்கோப்பையில் இடம் பெற்றவர் அது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது, இப்பொதுமன தம்பதியர்களுக்கு சினிமா வட்டாரங்களில் இருந்தும் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன…..