இன்றைய சினிமாவில் புதுமுகங்களாக பல நடிகர்கள் அறிமுகமாகி வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பு திறமையின் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில்

மோகன்லால், சுனில், சிவராஜ்குமார் , ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி , யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள் . இதையடுத்து இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தவர் பிரபல நடிகர் ஜாபர் சாத்திக் ஜெயிலர் திரைபடத்திற்கு முன் பத்து தல , விக்ரம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பின் மூலமாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது

மட்டுமின்றி இன்றைக்கு இவர் அந்த படத்தில் நடித்தாலே அந்த படம் ஹிட் ஆகி விடும் எனும் அளவிற்கு பிரபலமாக உள்ளார். இந்நிலையில் தற்போது தமிழை தொடர்ந்து மலையாளம் , ஹிந்தி , கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகின்றார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜாபர் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அதில் அவர் கூறும் போது ரஜினி சார்  என்னை பார்த்து எப்ப கல்யாணம் பண்ணுவ என அடிக்கடி கேட்டு கொண்டிருப்பார் இதையடுத்து

ஒருமுறை எனது கேர்ள் பிரண்டின் போட்டோவை காண்பித்த போது உனது கேர்ள் நன்றாக இருக்கிறார் என கூறினார் . இதனைதொடர்ந்து ஒருநாள் எனது காதலியை அழைத்து கொண்டு ரஜினி சாரை பார்க்க சென்று இருந்தேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவரது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவங்க தான் இவரோட காதலி என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………….