தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக நடிகர்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் இருந்து இன்றைக்கு வரை உலகளவில் இன்றளவு வரை பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இந்நிலையில் இவரது நடிப்பில் எப்போது படங்கள் வெளியானாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் எனலாம் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலகளவில் மக்கள் மத்தியில்

வெற்றிகரமாக ஓடிவருவதோடு வசூல் ரீதியாகவும் வேற லெவலில் சாதனை படைத்து வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் மோகன் லால் , சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஸ்ரெப் , ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த நிலையிலும் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தவர் பிரபல நடிகர் ஜாபர் சாதிக் . இவர்  விக்ரம்,

பாவகதைகள் , பத்து தல போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்திலும் வேற லெவலில் நடித்துள்ளார் இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி பல புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வரும் நிலையில் அண்மையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஜெயிலர் படத்தில்

நடிக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி அணிந்திருந்த கண்ணாடியை நான் விளையாட்டாக கேட்க அவரும் கொடுத்து விட்டதாக அந்த கிளாசின் புகைபடத்தை இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் . இந்நிலையில் ரஜினி அவர்கள் கொடுத்த கிப்ட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..