பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவி பொறுத்தவரை இந்த சேனலில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் வேற லெவலில் பிரபலமாக இருந்து வருகின்றன்ர்.இப்படி இருக்கையில் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருவதோடு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி

கொள்கின்றனர்.  அந்த வகையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் மகாபா ஆனந்த் . துவக்கத்தில் தனது திரையுலக வாழ்க்கையை ரேடியோவில் தொடங்கிய நிலையில் இன்றைக்கு சின்னத்திரை வெள்ளித்திரை கலக்கி வருகிறார். இதனைதொடர்ந்து சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், அண்டகாகசம் போன்ற பல முன்னணி ரியாலிட்டி

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் அதில் தொடர்ந்து பல வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது யூடுப் பக்கத்தில் தனது வீட்டின் ஹோம் டூரை வீடியோவாக பதிவிட்டு உள்ளார் .

அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்கா என வாயடைத்து போனதோடு பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அந்த வீடியோ இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு செம வைரளாகி வருகிறது……………..