ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு வில்லன் கதாபத்திரம் வலுவாக இருந்தாலே போதுமானது என்னதான் ஹீரோ படத்தில் காதல் , நகைச்சுவை , டான்ஸ் போன்ற சீன்களில் நடித்தாலும் வில்லனுடன் நேருக்கு நேர் சண்டை செய்யும் காட்சிகளில் தான் அதிக விருவிருப்புகள் அடங்கி இருக்கும் தற்பொழுது உள்ள நவீன சினிமா யுகத்தில் பல முன்னணி ஹீரோக்களே வில்லன் கதாபத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர் இன்னும் சொல்லபோனால் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற படங்களை விட வில்லனாக

நடித்து வெற்றி பெற்ற படங்களே அதிகம் என கூறலாம் இதுபோல சிறிது மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலெக்ஸ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரளவைத்தார் , இன்றைய காலகட்டங்களில் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டன ஆனால் முந்தைய சினிமாவில் வில்லன்கள் என்றாலே மக்கள் அவர்களை நிஜவாழ்கையிலும்  வில்லனாகவே பார்த்தனர்

ஆனால் இன்று வில்லன்களை வெறுத்த காலம் மாறி அவர்களை ரசிக்கத் தொடங்கிவிட்டனர் இன்றைய சினிமாவில் தான் அனைவரும் வில்லன்களாக நடித்துக் கொண்டு இருகின்றனர் ஆனால் 90 களில் வந்த படங்களில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு வில்லன் கதாபாத்திரம் என்றால் அது நடிகர் ஆனந்த் ராஜ் அவர்கள் தான் இவர் பல வெற்றி படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளார்

சூரிய வம்சம் , பாட்ஷா , நரசிம்மா , மூவேந்தர் , பாட்டாளி ஆகிய படங்களில் வில்லனாக நடித்து இந்த படங்கள் மிக பெரிய வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார் ,இந்நிலையில் ஆனந்த் ராஜ் அவர்கள் தன் குடும்பத்துடன் ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று அங்கு தேவை படும் அடிப்படி வசதிகளை செய்துகொடுத்தார் , அப்பொழுது எடுக்கப்பட்ட புகைபடங்கள் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று கொண்டு இருக்கிறது……….