தற்போது சினிமாவில் இளம் நடிகைகள் பலரும் தொடர்ந்து  வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதைகொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளும் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் பலரும் இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டனர். இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும்

கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ஒரு காலத்தில் பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை கிரண் ரத்தோடு. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் வின்னர் படத்திற்கு இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது இதன் பின்னர் பட வாய்ப்புகள் சரிவர

வராத நிலையில் சமூகவளைதலங்களின் பக்கம் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்த கிரண் தொடர்ந்து அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சொக்க வைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிரண், பிகினி உடையில் பதிவிட்ட போட்டோவை பார்த்த பலரும் உங்க ரேட்டு என்னன்னு ஓபனாக கேட்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் கூறுகையில், நான் ஒருவரை காதலித்தேன் ஆனால் எனது

வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு. இதுமட்டும் நடக்கலைனா நான் சினிமாவில் வெகுதூரம் சென்று இருக்கமாட்டேன் . மேலும் சிலர் என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கி வச்சிட்டாங்க , ஆனாலும் தற்போது நான் தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறேன் என உருக்கமாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………..