பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் பற்றிய எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது வீர லெவலில் சர்ச்சையாகி மாறி பல திருப்பங்களை சந்திந்து விடும் எனலாம் . இந்நிலையில் இது அரசியல் பிரபலங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் பலருக்கும் பரிச்சியமாக இருப்பதோடு தொடர்ந்து பல கட்சிகளுக்கு போட்டியாக இருந்து வருபவர் நாம் தமிழர் கட்சியின்  தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான்

அவர்கள் . இவர் அரசியலில் மட்டுமின்றி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்த ஒன்றே . இவ்வாறு இருக்கையில் சீமான் அவர்கள் குறித்து பல சர்ச்சையான தகவல்கள் அவ்வபோது வந்த வண்ணம் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகையான விஜயலட்சுமி சீமான் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்

என்னை திருமணம் செய்து சொல்லி விட்டு ஏமாற்ற  நினைப்பதாகவும் பேட்டி ஒன்றில் பேசி பரபரப்பை கிளப்பி இருந்தது . இருப்பினும் இது குறித்து பெரிதாக எந்த ஒரு தகவல்களும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நாம் தமிழர் கட்சி

ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டது உண்மை எனவும் அவரை கைது செய்ய வேண்டும் மேலும் அவரால் நான் உடலால் மற்றும் மனதளவில் பெரிதளவில் பாதிக்கபட்டு இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..