இன்றைக்கு சினிமாவில் புதுமுகங்களாக பல இளம் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுகென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த  சில வருடங்களுக்கு முன்னர் விமல் நடிப்பில் வெளியான களவானி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஓவியா. இந்த படத்தை

தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராமல் இருந்ததை அடுத்து சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஓவியா பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெகு பிரபலத்தை தேடி கொண்டார் மேலும் இவருக்கு என்று தனி ஓவியா ஆர்மி ரசிகர் கூட்டமே உருவானது. இதையடுத்து இவருக்கு  பட வாய்ப்புகள் குவிந்த

வண்ணம் இருந்த நிலையிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் பல புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம், நீங்கள் லெஸ்பியனா என்பது போலான

பல கேள்விகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதே  இது குறித்து உங்கள் கருத்து என கேட்டதற்கு, பொதுவாக நடிகை என்றாலே இது போன்ற பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும் இருப்பினும் இது போன்ற கருத்துகளை கேட்கும் போது ஒரு மாதிரியாக தான் இருக்கும் ஆனால் நான் இதை பெரிதாக எடுத்துகொள்வதில்லை அதோடு நான் லெஸ்பியன் எல்லாம் கிடையாது என கூறியுள்ளார்…………………………