பொதுவாக தற்போது ரசிகர்களின் மத்தியில் தமிழ் நடிகர்களை காட்டிலும் பிற மொழி நடிகர்கள் அதிகளவில்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர் எனலாம் . அந்த  வகையில் தெலுங்கு திரையுலகின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா . இந்நிலையில் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழிலும் ஒரு சில

படங்களில் நடித்துள்ளார் இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் படம் மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று தந்ததோடு இவருக்கு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் குஷி திரைப்படம் வெளியாகி வேற லெவலில் ஓடி கொண்டிருக்கிறது .

இதனைதொடர்ந்து இந்த படத்தில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்து உள்ள நிலையில் பலரும் இவர்கள் காதலித்து வருவதாக பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது . இது ஒரு பக்கம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இணையத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ” ஒரு பெண்ணின் கையை பிடித்து இருக்கும் போட்டோவை பதிவிட்டு

லாஸ்ட் ஹாப்பனிங் பட் திஸ் ஒன்ஸ் ட்ரூலி ஸ்பெஷல் -அனௌன்சிங் சூன் என குறிப்பிட்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்த பதிவை பார்த்த பலரும் விஜய் தேவ்ர்கொண்டா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஒருவேளை அது ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் எனவும் இருவரும் காதலித்து வருவதாக பலரும் கூறி வந்த நிலையில் இது உண்மையாக இருக்கலாம் என யூகித்து வருகின்றனர்………………….