இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிபடுத்திக் கொண்டு இருகின்றனர்  இன்றைய சினிமாத்துறையில் பல இளம் நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருகின்றனர் அதிலும் சிலர் நடித்த முதல் படத்தில் இருந்தே மிகவும் பிரபலமாகி விடுகின்றனர் முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் தங்களது ஒப்பற்ற நடிப்பினாலும் ஈடிணையற்ற அழகினாலும் ரசிகர்களை

கவர்ந்து கொண்டு இருகின்றனர் இருப்பினும் முந்தைய காலகட்டத்தில் இருந்த நடிகைகளுக்கு ஒரு தனித்துவமிக்க ஆற்றல் உண்டு எனவே கூறலாம் எந்த ஒரு சமூக வலைதளங்களும் இல்லாத காலத்தில் மக்கள் மனதை கவர்வது அவ்வளவு எளிதல்ல ஆகையால் தான் இன்றும் அந்த கால நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ஆதரவும் இருந்து கொண்டு இருக்கிறது அத்தகைய முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை நக்மா அவர்கள்

90 களில் பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான் அவர்கள் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார் பின்னர் தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்தார் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் , பின்னர் பாட்ஷா , வில்லாதி வில்லன் , சிட்டிசன் , பிஸ்தா , மேட்டுக்குடி போன்ற வெற்றி படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்

இதன் பிறகு நீண்ட நாட்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் பின்னர் அரசியலின் மேல் எழுந்த ஆர்வத்தால் அதில் பயணிக்க தொடங்கினார் இந்நிலையில் 48 வயதான நடிகை நக்மா அவர்கள் , தான் திருமணமே செய்துகொள்ள கூடாது எண்ணத்தில் எல்லாம் இல்லை எனக்கும் கணவர் குழந்தைகள் குடும்பம் என வாழ ஆசையாக தான் உள்ளது இதற்கு மேல் இவையெல்லாம் நடந்தால் பாப்போம் என கூறினார் ………