திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் நடந்து வரும்ம் நிலையில் இதன் விளைவாக பல சினிமா பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு விலகும் வகையில் காலமாகி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் இந்நிகழ்வு அதிகரித்து வரும் வகையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ளார். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, செண்டிமெண்ட் என பல தரப்பட்ட

முக்கிய கதாபத்திரத்தில் நடித்து பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ஆர் எஸ்  சிவாஜி . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நகைச்சுவையான நடிப்பு மற்றும் பேச்சால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளார் . இதையடுத்து இவரது பேமஸ் வசனமான “நீங்க எங்கேயோ போய்டீங்க ” இன்றளவும்

மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசபட்டு வருகிறது எனலாம் . இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் எதிர்பாரதவிதமாக இன்று  அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட

நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமானார் . அவருக்கு 66 வயதாகும் நிலையில் இவரது மறைவு திரையுலகினர் மற்றும்  ரசிகர்கள் மத்தியில் பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் பல சினிமா பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடுஅவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்…………………